Categories
அரசியல் மாநில செய்திகள்

டவுன் பஸ்ஸா ? அடிக்கடி டெல்லி போறீங்க – TTV தினகரன் கிண்டல் …!!

அமைச்சர்கள் தங்களின் சொந்த பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள் என்று TTV தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர்  காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தது. இதில் தாய் , தந்தை , பிறந்த இடம் உள்ளிட்ட கேள்விகளை தவிர்த்து அமல்படுத்தினால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். NPR குறித்து மக்களிடையே இருக்கும் அச்சத்தை மத்திய, மாநில அரசுகள் போக்கவேண்டும்.

அதிமுக அமைச்சர்கள் டவுன் பஸ்ஸில் போவது போல டெல்லி செல்கிறார். அவர்களின் சொந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசிடம் பேசி வருகிறார்கள். எங்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.பத்திரிகையாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் வலுவான தேர்தல் கூட்டணி அமைப்போம்.

மக்களை தந்திரமாக ஏமாற்ற தான் எடப்பாடி காவேரி டெல்ட்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்ததாக குற்றம் சாட்டிய TTV தினகரன் , அம்மா ஆட்சியில் பெண் சிசு கொலைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சியில் போதுமாக நடவடிக்கை இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |