Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம்!…. கடுப்பான நபர் நாய் போல் குரைத்து செய்த காரியம்….. வெளியான வீடியோ….!!!!

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவரது பெயர் ரேஷன் அட்டையில் தவறுதலாக பதிவாகி இருக்கிறது. இவர் தன் பெயரிலுள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த சூழ்நிலையில், இரண்டு முறையும் அது சரிசெய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. இதையடுத்து 3வது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்தி குட்டா என மாறி தவறாக வந்திருக்கிறது. இதனால் அவர் விரக்திக்கு ஆளாகி உள்ளார்.

ஏனெனில் இந்தியில் குட்டா என்பதற்கு நாய் என்று பொருள் ஆகும். இதன் காரணமாக கடுப்பான ஸ்ரீகாந்தி தத்தா, அப்பகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வந்த காரை மறித்து தன் கோரிக்கையை வித்தியாசமாக கோபத்துடன் முறையிட்டுள்ளார். தன் புகார் மனுவை அவரிடம் நீட்டி பலநொடிகள் நாய் போன்று குரைத்துகாட்டி புகாரளித்தார் ஸ்ரீகாந்தி தத்தா. அப்போது ஏதும் புரியாமல் திகைத்துபோன அதிகாரி பிறகு கோரிக்கையை வாங்கி படித்து சரிசெய்து தருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினார். ஸ்ரீகாந்தி தத்தா நாய் போன்று குரைத்துக்காட்டி மனு தரும் இவ்வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |