Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை?…. வெளியான பரபரப்பு தகவல்…. விளக்கம் கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!

பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியா கூறினார். அத்துடன் சிறையில் அவருக்கு சகலவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |