இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதில் இருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) போன்றவற்றை அதிகரித்துள்ளது. இப்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டிவிகிதங்களை அதிகரித்துள்ளது என்று இப்பதிவில் காண்போம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
HDFC வங்கியானது அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் இணையதளத்தின் அடிப்படையில், நவம்பர் 7, 2022 முதல் ஒரே இரவில் 7.90% ஆக இருந்த எம்சிஎல்ஆர் 8.20% ஆக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்துக்கான எம்சிஎல்ஆர் 7.90 சதவீதத்திலிருந்து 8.25 % அதிகரித்துள்ளது.
கனரா வங்கி
இந்த வங்கி அதன் ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட்டை (ஆர்எல்எல்ஆர்) திருத்தி இருப்பதோடு, நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தையும் (எம்சிஎல்ஆர்) அதிகரித்துள்ளது. வங்கியானது அனைத்து காலங்களிலும் எம்சிஎல்ஆர்-ஐ 20 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. மேலும் இவ்வங்கியானது ஒரே இரவில் 1-மாத எம்சிஎல்ஆர் மீதுள்ள விகிதங்களை 7.05%-ல் இருந்து 7.25% ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா வங்கி
தவணைக் கால கடன்களுக்குரிய எம்சிஎல்ஆர்-ஐ அதிகப்படுத்தி இருப்பதாக மகாராஷ்டிரா வங்கி தெரிவித்து உள்ளது. வாகனம், தனி நபர் மற்றும் வீடு ஆகிய பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் விலைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வருட எம்சிஎல்ஆர் அளவு கோல், 7.80 சதவீதத்திலிருந்து 7.90% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 மாத எம்சிஎல்ஆர் 5 அடிப்படை புள்ளிகளானது அதிகரிக்கப்பட்டு 7.50% ஆக இருக்கிறது.
டிசிபி வங்கி
டிசிபி வங்கி 27 அடிப்படைப் புள்ளிகளால் எம்சிஎல்ஆர்-ஐ திருத்தி இருக்கிறது. பெஞ்ச்மார்க் ஒரு ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 10.23 % ஆக உள்ளது. ஒன்று, மூன்று மற்றும் 6 மாத கால எம்சிஎல்ஆர்கள் முறையே 9.63 % , 9.79 % மற்றும் 10.02 % என திருத்தியமைக்கப்பட்டு உள்ளது.