நீண்ட ஆண்டுகளுக்கு பின் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. இதில், துணிவு தமிழக வெளியீட்டை ரெட் ஜெயின்ட் பெற்றுள்ளது. இதனால், வாரிசுக்கு போதிய திரையரங்குகள் இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சீமானிடம் வாரிசு பட பிரச்சனைக்கு உதயநிதி காரணமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்றார்.
தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை தடுக்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி வெளியிடவில்லை என்றால் போராடுவேன். ஆனால் அவர்கள் எப்படி சொல்லவில்லை. ஒரு தீர்மானம் போட்டுள்ளார்கள் அது செயலாக்கம் பெறவில்லை. பெறாது. அதனால் உறுதியாக விஜய் படம் வெளிவரும் உரிய நேரத்தில் வரும்.