FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2022 FIFA உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கூகுளின் சிறப்பு டூடுல் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. இந்த டூடுலில், இரண்டு ‘ஷூக்கள்’ கால்பந்து விளையாடுவது போல் உள்ளது. மேலும், இந்த டூடுலை க்ளிக் செய்தால்.. கத்தாரில் நடந்து வரும் FIFA உலகக் கோப்பை குறித்த விவரங்கள் காட்டப்பட்டு உள்ளது. FIFA உலக கோப்பைக்கான Google இன் சிறப்பு டூடுலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.