Categories
உலக செய்திகள்

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்துள்ளார்.

அதே நேரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை  முறையாக பதிவு செய்யவில்லை  என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்த வருடம் ஷாங்காய் நகரில் மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை சர்க்கரை நோய், இதய கோளாறு போன்ற நோய்களாக சீன சுகாதாரத்துறை பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனாலும்  இது போன்ற குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்துள்ளது.

Categories

Tech |