நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி சாதாரணமாக இல்லாமல் செறிவூட்டப்பட்ட சத்துக்கள் நிறைந்த போர்டிபைடு அரிசியாக வழங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் எனவும் இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.