Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்குத்தான் தளபதியை கொண்டாடுறாங்க”….. ஒரு கிராமம் முழுவதும் விஜய் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் மக்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை நேற்று சந்தித்தார். அதன்பிறகு  500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தளபதி விஜய் பிரியாணி விருந்து கொடுத்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, நடிகர் விஜய் எங்களுடைய கிராமத்திற்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எங்கள் ஊரின் பெயர் சிவகூடல். ஒருமுறை விஜய் அண்ணா எங்களுடைய கோரிக்கையை ஏற்று எங்கள் ஊருக்கு வந்தார்.

அதோடு எங்களுக்காக ஒரு கோவிலும் கட்டித் தந்து அன்னதானம் வழங்கினார். எங்கள் கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நாங்கள் விஜய்‌ பெயரைத்தான் வைப்போம். அந்த அளவுக்கு எங்கள் கிராமத்தினர் நடிகர் விஜயின் ரசிகர்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |