தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, வம்சி இயக்குகிறார். அதன்பிறகு தமன் இசையமைக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சம்யுக்தா, மீனா, சங்கீதா, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்துள்ளனர்.
We are happy to announce that #Varisu TN theatrical distribution will be done by @7screenstudio 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #VarisuPongal pic.twitter.com/P8MUkQCuQK
— Sri Venkateswara Creations (@SVC_official) November 20, 2022