Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் ஒதுக்க எதிர்ப்புகள்… வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம்…!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவால் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் பொங்கலுக்கு வெளியாகும் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணன் நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்திருக்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களுக்கு மட்டுமே கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. வாரிசு திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும் தெலுங்கு திரைப்படங்களுக்கு தமிழகத்தில் தியேட்டர்கள் ஒதுக்க கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றார்கள். இந்தப் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்றது. இதில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை கண்டித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |