Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களுடன்‌ 2 மணி நேரம் ஆலோசனை”…. நடிகர் விஜய் சொன்ன 2 முக்கிய விஷயங்கள்….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை ‌ பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு நடிகர் விஜய் பிரியாணி விருந்து வைத்தார். அதோடு நடிகர் விஜய் கிளம்பும்போது வாரிசு படத்தில் இடம்பெற்ற ஒரு ஸ்டெப்பையும் ரசிகர்களுக்காக போட்டு காண்பித்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது தன்னுடைய ரசிகர்களுக்கு 2 முக்கிய விஷயங்களை விஜய் சொன்னதாக கூறப்படுகிறது. அதாவது முதலில் குடும்பத்தை கவனியுங்கள் என்றும், படம் ரிலீசாகும் போது பாலாபிஷேகம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளாராம். மேலும் நடிகர் விஜய் இனி மாதம்தோறும் ரசிகர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |