தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சம்பா பருவ நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.