Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது…. அரைமணி நேரத்தில் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

சென்னையில் இருந்து 570 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும். நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 7.30 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |