Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…. பரபரக்கும் அதிமுக….. தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி உரிய முறையில் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதோடு‌ பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி எதற்காக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அவசரம் காட்டுகிறார் என்றும் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியது.

அதன் பிறகு அதிமுக கட்சியில் பொது செயலாளரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள். மேலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு தகுந்தார் போன்று அடுத்த கட்ட காய்களை நகர்த்துவதற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களுடைய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |