பஞ்சாப் நேஷனல் வங்கி டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, Mastercard, VISA Gold, Rupay ரக பிளாட்டினம் டெபிட் கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் தினசரி ஸ்வைப்பிங் மெஷின்களில் பயன்படுத்துவதற்கான வரம்பு 1,25,000-ல் இருந்து 3,00,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இவையனைத்தும் depit கார்டுகளுக்கு அனுமதிக்கப்படும் வரம்புகள் மட்டுமே. இண்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வரம்பை குறைத்தோ அல்லது உயர்த்தியோ கொள்ளலாம்.