Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது மகளிர் சுய உதவி குழுவினருக்கு 75 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |