Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கான வட்டி…. எவ்வளவு தெரியுமா?… வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 சதவீதம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வட்டி தொகை நேரடியாக ஊழியர்களின் கணக்கில் விரைவில் செலுத்தப்பட இருப்பதாகவும், அவ்வாறு செலுத்தப்படும் பட்சத்தில் ரூபாய்.1 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ. 8,100 வட்டியும், ரூபாய்.10 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ.81,000 ம் வட்டியாக கிடைக்கும் எனவும் தெரிகிறது.

Categories

Tech |