நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்னோஹோமிஷ் நகரிலுள்ள ஹார்வி பீட் என்ற விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி உள்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென உடைந்து குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த விபத்து குறித்து அமெரிக்க நாட்டின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.