Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி…. விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்…? முழு விவரம் இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு  பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் மானிய உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசே வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்த நிலம் இருக்க வேண்டும்.

இவர்கள் வேறு மானிய திட்டங்கள் எதிலும் உதவி பெறக்கூடாது. அதேபோல் கடந்த 7 வருடங்களில் விண்ணப்பதாரர் எந்த டிராக்டரும் வாங்கி இருக்கக்கூடாது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் பெண் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதுதான்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

Categories

Tech |