முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து சிறிது மீண்டு வந்தோம். இந்நிலையில் வேடிக்கையான உண்மை செய்தி ஒன்றை சொல்கிறேன். கடந்த 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது கருணாநிதி முதலமைச்சராகவும், நான் சென்னை மேயராகவும் இருந்தோம்.
இந்நிலையில் நான் மேயராக பொறுப்பேற்றுக்கொண்டு அடுத்த நிமிடமே மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து 20 நாட்கள் மழை பெய்து கொண்டே இருந்தது. யாராலும் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் நாங்கள் சீர்படுத்திக் கொண்டிருந்தோம். மேலும் மாநகராட்சி வாகனத்தில் சென்னை முழுவதும் சுற்றி பார்த்தோம். அப்போது ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்ததால் மழை பேயராக இருக்கிறது என்று வேடிக்கையாக சொன்னார்கள். அதேபோல் தற்போது குடிநீர் பிரச்னையே இல்லை. அந்த அளவுக்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. எனவே மக்கள் என்னை மிகவும் பாராட்டி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.