Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முன்பு உங்களின் ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை இரண்டையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படமும் கணினியில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஆதாரை புகைப்படம் சேவை வழங்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். பின்னர் tanged.gov.in இளையதள பக்கத்தில் சென்று உங்களின் மின் இணைப்புஎண்ணை  ஆதாருடன் இணைக்கவும் அல்லது https://adhar.tneblted.org/adharupload/என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |