விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும், உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சமாளிக்க வேண்டியிருக்கும். இன்று காரியத்தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்துசேரும். திடீர் கோபம் ஏற்படும், எதிர்பாலினரிடம் கொஞ்சம் கவனமாகவே பழக்கங்கள். பெண்களிடம் நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் கடும் போராட்டத்திற்குப் பின்னரே வெற்றி பெறமுடியும். கடுமையாக உழையுங்கள், படித்த பாடத்தை திறம்பட எழுதி பாருங்கள், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனநிலை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வு முடியும் வரை உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கட்டுபாட்டுடன் இருந்தால், காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்குவதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்