விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும். எப்போதும் கன்ஃபெக்சன் அறையில் நடைபெறும் நாமினேஷன் தற்போது ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளது. அதனால் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் திறந்த வாயை மூடாமல் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்போது அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.