Categories
மாநில செய்திகள்

அட!…. அதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க…. அவங்க சின்ன புள்ள…. மேயர் பிரியாவுக்கு ஆதரவு காட்டிய சீமான்….!!

சென்னையில் பிரியா ராஜன் மேயராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் சென்னையில்முதல் தலித் மேயர் என்று திமுக அவரை புகழ்ந்தது. சென்னை மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தவரும் பேட்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அவரின் பேச்சு பலருக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்து வருகிறது. இளம் மேயர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு எந்த மேடையிலும் பேசி பழக்கம் இல்லாதவராக இருக்கும் மேயர் பிரியாவின் பேச்சில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் செய்யும். இதனை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் வேலையை எதிர்க்கட்சிகள் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமானிடம் மேயர் பிரியாவின் பேச்சு தடுமாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அவங்க சின்ன புள்ள. ஒரு எளிய விளிம்பு நிலையில் இருந்து, முதன் முதலில் ஒரு பதவிக்கு வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாமல் எத்தனையோ பல பெரிய தலைவர்களை பேச்சில்  தடுமாறிடுறாங்க. அப்படி இருக்கையில் இவரை மட்டும் குறை பேசிட்டு இருக்க கூடாது. “கொசுவை ஒழிக்க வலை வழங்கும் விழா என சொல்வதற்கு பதிலாக கொசு வழங்கும் விழா” என்று சொல்லிட்டாங்க. அதை போய் பெரிய குறையா எடுத்துக்க கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதுதான் மாண்பு என்று சீமானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |