கன்னி ராசி அன்பர்களே..! இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை தயவுசெய்து எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் கூடும். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும், உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இன்று உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படலாம், கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனம் வேண்டும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். கூடுமானவரை இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் யாரிடமும் எந்தவித கோபமும் படாதீர்கள்.
இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைத்துதான் முன்னேற வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லாமல் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக்கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்ளுங்கள். அதேபோல் தேர்வு முடியும் வரை உணவு பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருந்தால் அதாவது காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப சிறப்பு. படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்