Categories
தேசிய செய்திகள்

தலித் சமூக பெண் தண்ணீர் குடித்தது குத்தமா?…. தொட்டியை இதை வைத்து சுத்தம் பண்றாங்க…. கொடூர சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா எனும் கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அப்பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்திலுள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்திருக்கிறார். அந்த பெண் மாற்று சமூகத்தினை(தலீத்) சேர்ந்தவர் என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் தங்களது தெருவிலுள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்ததால் லிங்காயத் பீடி தெருவை சேர்ந்தவர்கள் குடிநீர் தொட்டியை மாட்டு சிறுநீர் கொண்டு சுத்தம் செய்து இருக்கின்றனர். இந்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சம்பவம் உறுதி செய்யப்படும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |