Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் காரை பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு விபத்து… கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்… கோபத்தில் ரசிகாஸ்..!!!

விஜயின் கார் பின்னால் வந்த ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டும் கண்டு கொள்ளாமல் விஜய் சென்றதால் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு விஜய் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள்.

நடிகர் விஜய் கார் பின்னால் வந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட விபத்து.. கண்டுக்காமல் போன விஜய் | Vijay Fans Accident Because Chasing Vijay

விஜய் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் சென்றபோது ரசிகர்கள் அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார்கள். கார் சென்ற வேகத்திற்கு ரசிகர்களும் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார்கள். அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு கடுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த விஜய் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றதால் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கின்றார்கள்.

Categories

Tech |