பிரசாந்த் சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் இந்த படத்தை திரையில் காண ஆவலுடன் இருப்பதாகவும் சிம்ரன் தெரிவித்துள்ளார். இத்துடன் அவர் இரண்டு போஸ்டர்களையும் பதிவிட்டு உள்ளார்.