Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…புத்தி எண்ணம் உருவாகும்..முன்னேறி செல்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். தாயாருடன் சின்னதாக மனத்தாங்கல் வரக்கூடும். பழைய கடன்களை தீர்க்க புதிய வழிகளை யோசிப்பீர்கள், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி தான் முன்னேறி செல்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், சாதுரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலையும் உயரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகளும் அதிகரிக்கும்.

இன்று  மாணவச் செல்வங்கள் கடினமாக உழையுங்கள், உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அது மட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள், காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். நீங்கள் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |