Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாய் கடன்…. காசோலை கொடுத்து மோசடி செய்த நபர்…. நீதிமன்றம் அதிரடி…!!!

காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.

ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் காசோலை திரும்ப வந்தது. இதுகுறித்து வசந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பரணிதரன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு 2-வது குற்றவியல் விரைவு நீதிமன்றம் பரணிதரனுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |