டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கி உள்ளார்.