Categories
அரசியல் தேசிய செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! இது ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா?… கூட்டத்தை கண்டு வியந்த அண்ணாமலை..!!

நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும்  நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? என வியர்ந்து பேசினார்.

தமிழக வனத்துறை அமைச்சர் அவரின் வீட்டு முன்பு பல ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். டாஸ்மாக் கடை மூலமாக அமைச்சருக்கு மாதம் 5 கோடி ரூபாய் வருமானம் வருகின்றது. ஒரு கட்சி மாநாடு நடத்தினால் அங்கே சட்டை உட்பட எல்லா பொருட்களும் கிடைக்கும். ஆனால் காங்கிரசார் சட்டையை கிழித்துக்கொண்டு உருட்டு கட்டையுடன் அலைகின்றார்கள். திமுகவினரும் சிலர் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வருவார்கள். சென்னையில் மழையின் போது தமிழக முதலமைச்சர் லவ் டுடே திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இந்த திரைப்படத்தை தான் நாம் வாங்கியுள்ளோமா என தனது மகனிடம் கேட்கின்றார். மக்களின் கவலை அவருக்கு தேவையில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |