பிரபல நாட்டில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்காளதேச நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இவருக்கு வனிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் சப்னா வேலைக்காக வெளியே செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த அபுபக்கர் ராணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து ராணிக்கு அபுபக்கருக்கு திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆத்திரமடைந்த ராணி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ராணியை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து அபுபக்கர் அவரது தலையை துண்டித்துள்ளார்.
அவரது கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு சாக்கடையில் வீசியுள்ளார். இது குறித்து வங்காளதேச இந்துகளுக்கான குரல் என்ற அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் . நாவ்காவன் மாவட்ட நீதிபதி ஹசன் இஸ்லாம் தொடர்ந்து இந்துக்களை மலான் என அழைத்து வருகிறார். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோது வங்காளதேச மற்றும் இந்திய இந்துக்களை அவர் மலான்கள் என குறிப்பிட்டார் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.