Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. “தத்தா ஆன குத்தா”…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!

அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் மீண்டும் பெயர் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை  இடைமறித்து ஸ்ரீகாந்த் குமார் தத்தா திடீரென நாய் குரைப்பது போல மிமிக்கிரி செய்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த மனுவை  அவரிடம் வழங்கியுள்ளார். இவரின் இந்த வித்தியாசமான செயலால் குழப்பம் அடைந்த அதிகாரி அந்த மனுவை வாங்கி பார்த்துள்ளார். பின்னர் அதிகாரி விரைவில் பெயர் மாற்றப்படும் என உறுதியளித்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து  சென்றுள்ளார்.

Categories

Tech |