Categories
சினிமா தமிழ் சினிமா

“மனைவி ஷாலினியின் பிறந்தநாள்”…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்…… வைரலாகும் கலக்கல் கிளிக்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் அஜித்துடன் காதலில் விழுந்தார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகையின் ஷாலினி நேற்று தன்னுடைய 42-வது பிறந்தநாள் விழா கொண்டாடினார்.

 

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்து வரும் நடிகை ஷாலினிக்கு பிறந்தநாளின் போது நடிகர் அஜித் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது ஷாலினியின் பிறந்தநாளை ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து குடும்பத்தினருடன் அஜித் கொண்டாடியுள்ளார். அப்போது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியர்களுடன் நடிகர் அஜித் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர் அர்ஜுனும் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடிகை ஷாலினியின் பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |