Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..லாபம் ஈட்டுவீர்கள்..மரியாதை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்கள..! இன்று உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள், சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடும். வேற்றுமதத்தவர் உதவிகளை செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். இன்று அடுத்தவர்களின் செயல்களால் கொஞ்சம் கோபம் மட்டும் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். கொடுத்த கடனை திரும்ப பெறுவது முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கவனத்தை சிதறவிடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும், கூடுமானவரை இன்று அலட்சியத்தை தயவுசெய்து முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

அதேபோல எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள்,  பணவரவில் எந்தவித மாற்றமுமில்லை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என்றே சொல்லலாம், கொஞ்சம் கடினப்பட்டு உழைத்து பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. கவனம் சிதறாமல் பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், அதேபோல தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனநிலையை அமைதியாக வைத்துக் கொண்டாலே கல்வியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்.

தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டு செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |