Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவின் சீடர் தற்கொலை ..! ஃபேஸ்புக்கில் நேரடி வீடியோவில் பகீர் வாக்குமூலம்.!!

நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ்  தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள திரிசூலம் நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.  இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பிய அவர் மறுநாள் காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு  முன்பாக 10 மணி அளவில் கையில் செல்போனுடன்  ஃபேஸ்புக்கில் நேரடி வீடியோவை   6 நிமிடங்கள் பதிவிட்டார். அந்த வீடியோவில்தான்  தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிஉள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த ஒருவரின் மகளை  காதலித்து வந்ததாகவும், அது நிறைவேறாத மன விரக்தியில் அவர் இருந்ததாகவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மார்ச் 1ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய பின்னர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்தியாக பணியில் சேர்ந்ததும் கூறப்படுகிறது. வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |