Categories
மாநில செய்திகள்

“காலை வாரிய கனமழை”….. எப்பவும் இதே ட்விஸ்ட் தான் சென்னையில்….. வெதர்மேன் ரிப்போர்ட்டை பொய்யாக்கிய மழை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கி விட்டது. தற்போது சென்னையில் வெறும் சாரல் மழை மட்டும் பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நேற்று மாலை உள்ள நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதால் சென்னைக்கு 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் மீண்டும் வரலாறு பொய்த்து விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்நிலையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட நிலையில் மழை பெய்யாமல் போன தருணங்கள் குறித்தும வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 15 வருடங்களில் பல முறை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

அதாவது கடந்த 2010-ஆம் ஆண்டு ஜல்‌புயல், 2018-ம் ஆண்டு பெய்ட்டி புயல், 2010-ம்‌ ஆண்டு கஜா புயல் போன்றவைகளின் போது சென்னைக்கு நல்ல மழை பெய்யும் எதிர் பார்க்கப்பட்டபோது பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில் சென்னைக்கு குறைவான அளவில் மழை பதிவானது. இதனையடுத்து நேற்று அவர் போட்ட பதிவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய பகுதிகளில் தொடர் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை அப்படி மழை எதுவும் பெய்யவில்லை. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னையில் ஓரிரு  இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |