Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. இனி பொருட்கள் வாங்க?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் வாயிலாக இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு UIDAI வாயிலாக பெரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

UIDAI இது தொடர்பான தகவல் அளித்தபோது, இனிமேல் நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் வாயிலாக ரேஷன் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI-ன் டுவிட் வாயிலாக இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அடிப்படையில் இனிமேல் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் அடிப்படையில் ரேஷன் பொருட்களை பெறலாம். எனினும் உங்களது ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே இவ்வசதியைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். இது தவிர்த்து ரேஷன்கார்டு குறித்த ஏதேனும் பிரச்னை இருந்தால், 1947 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.

Categories

Tech |