ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்யனபூர் பகுதியில் கோரே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.44 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியிலிருந்து சரத்பூருக்கு வெற்று பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன் பிறகு 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய ரயில்வே மந்திரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனையடுத்து முதல்வர் நவீன் பட்நாயக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தின் காரணமாக 19 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு 20 ரயில்களின் வழித்தடங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.