Categories
தேசிய செய்திகள்

LIC-ன் சூப்பர் திட்டம்: 25 வயதில் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. இச்சேர்க்கையானது முதிர்ச்சிக்கு முன்பு எந்நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி உதவியையும், எஞ்சி இருக்கும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு நேரத்தில் நல்ல தொகையையும் வழங்குகிறது.

LIC புது எண்டோமென்ட் திட்டத்தின் சிறப்பு என்ன?..

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 8 வயது முதல் 55 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சமான காப்பீட்டுத் தொகையானது ரூபாய்.1 லட்சம் ஆக இருக்க வேண்டும். அதன் மெச்சூரிட்டி காலம் குறைந்தபட்சம் 12 வருடங்கள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகளாக இருக்கவும்.

 25 வயதில் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்?

# முதலாவதாக நீங்கள் LICன் புது எண்டோமென்ட் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# உங்களது 25 வயதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# காப்பீட்டுத்தொகையில் ரூபாய்.22 லட்சத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அதிகபட்ச கால அளவு 35 வருடங்கள்.

# இவற்றில் உங்களது முதல் வருடத்திற்கான மாதாந்திர பிரீமியம் தொகை ரூபாய்.5087 ஆக இருக்கும்.

# அதேநேரம் 2ம் ஆண்டு முதல் மாதந்தோறும் செலுத்தவேண்டிய பிரீமியத் தொகை ரூபாய்.4978 ஆக இருக்கும்.

# இதன் வாயிலாக மெச்சூரிட்டி நேரத்தில் சுமார் 1,07,25,000 ரூபாய் நீங்கள் பெறுவீர்கள்.

இதனிடையில் உங்களது வயது அதிகரித்தப் பிறகு, ​​அதாவது முதிர்ந்த வயதில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கினால், ​​பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். அத்துடன் மெச்சூரிட்டியின்போது பெறப்படும் தொகையும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |