7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தனி ஒரு ஆளாக தேடி அலைந்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபாயா சுதார என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதிஸ்ரீ மொஹரணா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகிய நிலையில் 2 மாதங்களுக்குப் பின் அவரது மனைவி இதிஸ்ரீ மாயமானார். இதைத்தொடர்ந்து அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து ஏப்ரல் மாதம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் மே மாதம் இதிஸ்ரீயின் தந்தை தனது மகளை அபாயா வரதட்சனை கொடுமை காரணமாக அடித்துக் கொன்று விட்டு உடலை எங்கோ மறைத்து வைத்துள்ளார்; என்று புகார் அளித்தால் அபாயாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கினார். தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக தனி ஒரு ஆளாக மனைவியை தேட ஆரம்பித்தார்.
அவருடைய பழைய நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் விசாரணையை தொடங்கினார் அந்த விசாரணை முயற்சியின் பலனாக காதலனுடன் இதிஸ்ரீ வசித்து வருவதை சமீபத்தில் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் காதலன் ராஜிவ் லோகன் மற்றும் இதிஸ்ரீயை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதிஸ்ரீ கூறியது; தனக்கு விருப்பம் இலாதநிலையில்பெற்றோர்கள் கட்டாயபடுத்தி அபாயாஉடன் திருமணம் செய்து வைத்ததாகவும், இதனால் நான் என் காதலனோடு வந்துவிட்டதாக கூறினார். தற்போது தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதை கேட்டு போலீசார் மற்றும் கணவர் அபாயா அதிர்ச்சி அடைந்தனர். 7 ஆண்டுகளாக குஜராத்தில் வசித்து வந்த தம்பதி சமீபத்தில் ஒடிஷா வந்திருந்த போது அபாயாவிடம் சிக்கிக்கொண்டனர்.