Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை இது நாள் வரை செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி இரண்டு சதவீத தனி வட்டியை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |