சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.
இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலக தற்பொழுது வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நிறைய கதாபாத்திரம் மாற்றம் நடந்த காரணத்தினால் ரசிகர்கள் சீக்கிரம் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சீரியலில் பாரதிக்கு உண்மைகள் அனைத்தும் தெரியவர கிளைமேக்ஸ் வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/ClJIgUxNQ1U/?utm_source=ig_embed&ig_rid=1a134f38-68e1-4b5e-9a14-3cb27e8633a9