Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பாபா நகரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சுதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபத்தில் கணேசன் தனது மனைவியை விட்டு பிரிந்து அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவில் இருக்கும் தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தனியார் விடுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் மது குடித்த கணேசன் தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் “நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுதா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனையடுத்து விடுதிக்கு விரைந்து சென்ற சுதா ஊழியர்களின் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |