Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க மாணவர்கள்….. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஆலன் ஜெர்மான்ஸ், வேலூரைச் சேர்ந்த தருண்குமார், விருதாச்சலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோவளம் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அமைந்தகரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆலன் ஜெர்மான்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |