பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.
இந்த தவணை தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இந்த திட்டத்தில் இணைய https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யவும்.