பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடத்திலேயே நீக்க அறிவிப்பை பகிர்ந்து காயத்ரி ரகுராம் தன்னுடைய twitter பக்கத்தில், நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடை நீக்கத்தோடு தேசத்திற்காக உழைப்பேன் என்று பதிலளித்துள்ளார்.
I accept. But people who love me will talk to me. No one can stop that. I will work for the Nation with suspension. pic.twitter.com/BM09VEc2vP
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) November 22, 2022