இயக்குனர் ஏ. எம். ஆர் ரமேஷ் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார்.
இந்த வெப்தொடரில் நடிகை கிஷோர் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய், கயல் தேவராஜ் ,விஜயா, சுரேஷ் ஓபராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் இந்த வெப் தொடர் உருவாகவுள்ளது.
இந்தத் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என வீரப்பனின் மனைவி பெங்களூர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றம் வீரப்பன் வெப்தொடருக்கு எதிரான தடையை நீக்கியுள்ளது. மேலும், இந்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இயக்குனர் ஏ .எம். ஆர். ரமேஷ் இந்த தொடரின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளார்.